Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

Père-Lachaise கல்லறை! - சில தகவல்கள்!!

Père-Lachaise கல்லறை! - சில தகவல்கள்!!

20 கார்த்திகை 2017 திங்கள் 13:30 | பார்வைகள் : 23100


ஒரு கல்லறை குறித்து தெரிந்துகொள்ள அப்படி என்னதான் இருக்கின்றது? இருக்கிறது... பரிசில் இருக்கும் மிகப்பெரிய கல்லறை குறித்து இன்று பார்க்கலாம்!!  
 
Cimetière du Père-Lachaise என அழைக்கப்படும் இக்கல்லறை பரிசில் உள்ள மிக பெரிய கல்லறையாகும்.  பரிசுக்குள் இருக்கு இட நெருக்கடிக்குள் 44 ஹெக்டேயர்கள் ( 110 ஏக்கர்கள்), இடம் கல்லறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் பாருங்கள். 
 
20 ஆம் வட்டாரத்தின் Boulevard de Mènilmontant பகுதியில் உள்ள இந்த கல்லறை, பல்வேறு காலகட்ட கதைகளைக் கொண்டது. தவிர, பரிசில் உள்ள பூங்காவுடன் சேர்ந்த ஒரே ஒரு கல்லறையும் இதுவாகும். 
 
வருடத்துக்கு 3.5 மில்லியன் பேர் உலகம் முழுவதிலிருந்தும் வருகை தருகிறார்களாம் கல்லறையை பார்வையிட. இது மே மாதம் 21 ஆம் திகதி, 1804 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 
 
இந்த கல்லறையில் முதன் முதலாக Adélaïde Paillard எனும் ஐந்து வயது சிறுமி புதைக்கப்பட்டாள். 1804 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நாளில் இருந்து அவ்வருட இறுதி வரை வெறுமனே 13 பேர் மாத்திரமே புதைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. 
 
பின்னர், 1830 ஆம் ஆண்டில் இங்கு 33,000 பேர் புதைக்கப்பட்டும்... அது 1850 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் பேர்களாக அதிகரிக்கவும் செய்தது. 
 
இரண்டாம் உலகப்போரின் போது பலரின் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டன. அன்றைய காலத்தின் திகதிகளை கொண்ட கல்லறைகளை இன்றும் நீங்கள் இங்கு பார்வையிடலாம். 
 
இன்று, பரிசை சேர்ந்தவர்கள் மாத்திரமே இங்கு புதைக்கலாம் என ஒரு சட்டம் போடப்பட்டுள்ளது.  'யாருக்கெல்லாம் இங்கே தங்களை புதைக்கவேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?' என்றெல்லாம் ஒரு கட்டத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்களாம்..' அட பாவமே??!

வர்த்தக‌ விளம்பரங்கள்