இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
4 ஆனி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 22039
ஐந்தாம் வட்டாரம் எப்போதும் ஆச்சரியம் நிறைந்தது... இந்த தொடரில் இன்று ஐந்தாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!
ஐந்தாம் வட்டாரம் 2.54 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை கொண்டது. அதாவது 628 ஏக்கர்கள் அளவு.
ஐந்தாம் வட்டாரத்தை சுருக்கமாக Panthéon எனவும் அழைப்பார்கள். 1758 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், இந்த வட்டாரத்தின் 'லாண்ட் மார்க்' அடையாளம்.
சென் நதி ஊடறுக்கும் ஒருசில வட்டாரங்களில் இதுவும் ஒன்று.
2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருந்த கணக்கின் படி 60,000 பேர்வரை இங்கு நிரந்தரமாக வசிக்கின்றனர்.
உயர்கல்விக்காக அமைச்சகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் இங்கு தான் அமைந்துள்ளது.
பிரபல ஜப்பான் நிறுவனமாக SONY நிறுவனத்தின் பிரான்சுக்கான நிறுவனமும் ஐந்தாம் வட்டாரத்தில் தான் நிலவி வருகிறது.
ஒரே சமயத்தில் 15,000 பேர்வரை அமர்ந்திருக்கக்கூடிய மிக பிரம்மாண்டமான Arènes de Lutèce அரங்கு கூட இங்குதான் உள்ளது. (இது முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது!)
இவை தவிர பல முக்கிய நூலகங்களும், அருங்காட்கியகங்களும் நிறைந்துள்ள இந்த வட்டாரம் எப்போதும் ஜனத்திரள் நிறைந்த ஒரு பிஸியான வட்டாரமாகும்.
நாளை, ஆச்சரியம் நிறைந்த ஆறாம் வட்டாரத்துக்குச் செல்லலாம்...!!
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan