இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
12 ஆனி 2018 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 21960
இன்றைய ஒன்பதாவத் நாள் தொடரில், ஒன்பதாம் வட்டாரம் குறித்து சில ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்... ஒன்பதாம் வட்டாரத்துக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது... Opéra!!
ஒன்பதாம் வட்டாரம் எதற்கு புகழ் பெற்றது...? இங்கு பல புராதன கட்டிடங்களும், பிரெஞ்சு கலாச்சாரத்தை பறைச் சாற்றும் விதமான பல அம்சங்களும் உண்டு.
Opéra என பெயர் இந்த வட்டாரத்து பெயர் வந்தற்கு காரணமே, இங்குதான் ஒபேரா கவுஸ் உள்ளது. பலருக்கு சட்டன ஞாபகம் வருவது இங்குள்ள Galeries Lafayette!! 1912 ஆம் ஆண்டில் இருந்து இது இயங்கி வருகின்றது. முதன் முதலாக ஒன்பதாம் வட்டாரத்தில் ஆரம்பித்திருந்தாலும், இன்று நாடு முழுவதும் கிளை விரித்து பல நாடுகளுக்கும் சென்றுள்ளது இந்த Galeries Lafayette வணிக வளாகம். தவிர ஒரு பில்லியன் யூரோக்களை வருடத்துக்கு வருமானமாக பெறுகிறது இந்த நிறுவனம்.
2.17 சதுர கிலோமீட்டர்கள், அதாவது 841 ஏக்கர்கால் பரப்பளவை கொண்டுள்ளது ஒன்பதாம் வட்டாரம்.
பரிசில் இருக்கும் ஏனைய வட்டாரங்களை காட்டிலும், இங்கு தான் எண்ணற்ற வணிக வளாகங்கள் அரங்குகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனாலேயே இந்த வட்டாரம் அதிக வருமானம் கொழிக்கும் இடமாக உள்ளது.
1901 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருந்த கணக்கின் படி, இங்கு 124,011 பேர் வசித்துள்ளனர். ஆனால் இப்போது 55 ஆயிரம் நிரந்த குடியேற்றவாதிகளை கொண்டுள்ளது. எனினும் பரிசில் பிற வட்டாரங்களை விட, அதிகம்பேருக்கு இது தான் தொழில் வளாகமாக உள்ளது. 111,939 பேர் இங்கு பணி புரிகின்றார்கள்.
உலகின் பல தலைசிறந்த நிறுவனங்கள் எல்லாம் இங்குதான் படையெடுத்துள்ளன. பல மகிழுந்து தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள்... அட அவ்வளவு ஏன்... கூகுள் நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையே ஒன்பதாம் வட்டாரத்தில் தான் உள்ளது.
இப்படி, இந்த வட்டாரம் பணப்புழக்கம் அதிகம் கொண்ட வட்டாரம் மட்டுமில்லாது, மிக மிக பிஸியான வட்டாரமும் கூட!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan