Noisy-le-Sec : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
3 தை 2025 வெள்ளி 19:58 | பார்வைகள் : 13239
Noisy-le-Sec (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஜனவரி 2 ஆம் திகதி நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள André-Grégoire (Montreuil நகரில் உள்ள) மருத்துவமனையின் வாசலில் இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் 37 வயதுடைய ஒருவரை வீசிவிடுச் சென்றுள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவருக்கு சிகிச்சைகள் அளிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது அடிவயிற்றில் துப்பாக்கி காயங்கள் இருந்துள்ளன.
அவர் சில நிமிடங்களுக்கு முன்னதாக Noisy-le-Sec நகரில் உள்ள cité de la Renardière பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய நபரே சுடப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan