tickets resto : இன்று முதல் சில மாற்றங்கள்!!
1 தை 2025 புதன் 17:02 | பார்வைகள் : 10209
உணவக வவுச்சர்களுக்கு (tickets resto) வழங்கப்பட்டுள்ள காலக்கெடு நேற்று டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில், அதன் காலாவதி திகதி பிற்போடப்படவில்லை. அதற்கு பதிலாக வவுச்சர்கள் அனுமதிக்கும் சில பொருட்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்பொருள் அங்காடிகளில் உணவுப்பொருட்களை வாங்க இதனைப் பயன்படுத்த முடியாது. உதாரணத்துக்கு பாஸ்தா, அரிசி, முட்டை, மீன், இறைச்சி, மரக்கறிகள் போன்ற பொருட்களை இந்த வவுச்சர்களை பயன்படுத்தி வாங்க முடியாது.
அதற்கு பதிலாக உணவகங்களில் உள்ள சமைத்த உணவுகள், சான்விச், சலாட் போன்றவற்றை மாத்திரமே வாங்க முடியும்.
ஆனால் இந்த நிலமை சிலவேளைகளில் மாற்றத்துக்கு உள்ளாகலாம். இது தொடர்பில் செனட் மேற்சபையில் ஜனவரி 15 ஆம் திகதி விவாதம் ஒன்று இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan