இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
23 ஆனி 2018 சனி 13:30 | பார்வைகள் : 22653
இன்றைய 15 ஆவது நாளில், Vaugirard என அழைக்கப்படும் பதினைந்தாவது வட்டரம் குறித்து பல சுவாரஷ்யமான தகவல்களை பார்க்கலாம்!!
8.5 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்த வட்டாரத்தில் 232,000 பேர் வசிக்கின்றனர். பரிசில் அதிக சனத்தொகை கொண்ட வட்டாரம் இது. தவிர 15 ஆம் வட்டாரம் மிகவும் புகழ்பெற்ற வட்டாரம் ஆகும்.
இந்த வட்டாரம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தவிர இங்கு பார்ப்பதற்கு எண்ணற்ற அம்சங்கள் உள்ளன.
14 ஆம் வட்டாரத்துடன் தொடர்புபட்டிருந்தாலும், மொம்பர்னாஸ் கட்டிம் 15 ஆம் வட்டரத்தின் முக்கிய அம்சமாகும். ஈஃபிள் கோபுரத்தை பின்னால்
வைத்துக்கொண்டு, கம்பீரமாக நின்றிருக்கும் சுதந்திர தேவி சிலையும் 15 ஆம் வட்டாரத்துக்குச் சொந்தமானதே.
வாரத்தில் எல்லா நாட்களும் திறக்கப்படும் Musée Pasteur இங்கு மிகப்பிரபலம்.
Citroën மகிழுந்து நிறுவனத்தின் பழைய 'மொடல்' மகிழுந்துகளை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். ஒருதடவை சென்று பாருங்கள் வித்தியாசமான மகிழுந்துகள் எல்லாம் காட்சிக்கு உள்ளன.
Orange S.A. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமையகமும், Eutelsat நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு தான் உள்ளது.
இவை தவிர, பல பல்கலைக்கழகங்களும், அருங்காட்சியகங்களும் இங்கு அணிவகுத்துள்ளன. பிரெஞ்சு நடிகை மற்றும் பாடகியான Brigitte Bardot இங்கு தான் பிறந்தார்.
சொல்ல மறந்துவிட்டோமே... பிரான்சின் மிக புகழ்பெற்ற குழந்தைகள் மருத்துவமனையான Necker மருத்துவமனை கூட இங்கு தான் உண்டு.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan