இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
25 ஆனி 2018 திங்கள் 11:30 | பார்வைகள் : 22114
பரிசில் உள்ள மூன்றாவது மிக வருமானம் நிறைந்த மாவட்டமான 16 ஆவது வட்டாரம், இன்றைய பதினாறாம் நாள் தொடரில்...
பதினாறாம் வட்டாரம் எதற்கு புகழ் பெற்றதோ இல்லையோ, விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்றது. seizième என மற்றொரு பெயர் கொண்ட இந்த வட்டாரத்தில், பிற வட்டாரங்களை விடவும் அதிகமான விளையாட்டு மைதானங்களும், விளையாட்டுத்தடலும் உள்ளன.
இதனாலேயே இங்குள்ள மக்களுக்கு, கேளிக்கைக்கு பஞ்சம் இல்லை. 7.85 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட இந்த வட்டாரத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் நிரந்த குடியாளர்களாக வசிக்கின்றனர்.
உதைப்பந்தாட்டத்துக்கு பெயர் போன Parc des Princes மைதானம் இங்கு தான் உள்ளது. 'பிரெஞ்சு ஓபன் டெனிஸ்' க்கான களமான Stade Roland Garros மைதானம் + அரங்கும் இங்குதான் உள்ளது. ருக்பி விளையாட்டு மைதானம் இங்கு உண்டு. பரிசின் இரண்டாவது மிகப்பெரிய பொது பூங்காவான Bois de Boulogne கூட இங்கு தான் உண்டு.
இத்தனைக்குமே 16 ஆம் வட்டாரத்தின் நிலப்பரப்பு சரியாக இருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறதா?
இல்லை, இன்னும் பல அருங்காட்கியகங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் என அணிவகுத்து நிற்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா, 16 ஆம் வட்டாரத்தில் பாதிக்கும் மேல் Bois de Boulogne பூங்கா தான் பிடித்துக்கொண்டுள்ளது. 4,029 ஏக்கர்கள் 16 ஆம் வட்டாரம். அதில் Bois de Boulogne மாத்திரம் 2088 ஏக்கர்கள். அடேங்கப்பா!!
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான Thunderball இல் சில காட்சிகள் 16 ஆம் வட்டாரத்தில் படமாக்கப்பட்டன. Last Tango in Paris திரைப்படம் கூட இங்கு தான் எடுக்கப்பட்டிருந்தது.
16 ஆம் வட்டாரத்தில் மாத்திரம், 25 க்கும் மேற்பட்ட 'லீசே'க்கள் உள்ளன என்பது உபரித் தகவல்!!
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan