பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
10 ஆடி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 22864
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள் அல்ல... ஆச்சரியம் தரும் தகவல்கள்..!!
பிரான்சின் தென்மேற்கு கடைக்கோடி எல்லையான Nouvelle-Aquitaine மாகாணத்தின் Gironde நகரில் உள்ளது. உண்மையில் அது கடலில் தான் உள்ளது. கடற்கரையில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் கடலுக்குள் உள்ளது இந்த வெளிச்சவீடு.
223 அடி உயரமுள்ள இந்த "Cordouan lighthouse" என அழைக்கப்படும் வெளிச்சவீடு, பிரான்சின் மிக பழமையான, பிரான்சின் மிக உயரமான வெளிச்ச வீடாகும். தவிர உலகில் உள்ள வெளிச்சவீடுகளில் 10 ஆவது உயரமான வெளிச்சவீடும் இதுதான்.

தனியே கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வெளிச்சவீட்டின் முதல் கல், 1611 ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. 400 வருடங்களை கடந்த அசாத்தியமான பிரமிப்பு ஒன்று ஏற்படுகிறதல்லவா..?? கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்த வெளிச்சவீட்டினை புணரமைத்து தானியங்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகில்
மிக நீண்ட காலமாக இயங்கும் வெளிச்சவீடுகளில் இதுவும் ஒன்று.
பிரான்சின் தலைசிறந்த கட்டிடக்கலைஞரான Louis de Foix, இவ்வெளிச்ச் வீட்டினை வடிவமைத்தார். தற்போது இந்த வெளிச்சவீடு யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan