Pont de Bir-Hakeim மேம்பாலம்!!
19 ஆடி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 23807
முன்னர், பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள Île aux Cygnes பற்றி தெரிவித்திருந்த போது, இந்த செயற்கை தீவை மூன்று மேம்பாலங்கள் ஊடறுக்கின்றன என தெரிவித்திருந்தோம். அதில் ஒன்று தான் இந்த Pont de Bir-Hakeim!!
இதை வெறுமனே மேம்பாலம் என சொல்லிவிட்டு கடக்கமுடியாது. இதற்குள் பல வரலாறுகள் புதைந்துள்ளது.
மேம்பாலத்தின் ஒரு பக்கம் 15 ஆம் வட்டாரத்தையும் மற்றொரு பக்கம் 16 ஆம் வட்டாரத்தையும் இணைக்கின்றது.
இரண்டு அடுக்குகள் கொண்டது இது. ஒன்று வாகனங்களின் இரு பக்க போக்குவரத்தும், அதனோடு இணைந்த பாதசாரிகளுக்கான போக்குவரத்து பகுதியும் உள்ளது.

1878 ஆம் ஆண்டு இங்கு ஒரு பாலம் இருந்தது. அது ஈஃபிள் கோபுரத்தின் கால்கள் போல் அரை வட்ட வடிவமாக இருந்தது. அப்போதிருந்த தொழில்நுட்பத்தில் அதுபோன்ற ஒரு மேம்பாலத்தை தான் அமைக்கக்கூடியதாக இருந்தது.
பின்னர் அந்த பாலத்தை இடித்துவிட்டு 1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் தான் Pont de Bir-Hakeim.
சென் நதியை ஊடறுக்கு இந்த மேம்பாலத்தில் நின்றால், தலைக்கு மேல் ஆறாம் இலக்க மெற்றோவும், கீழே படகுகளும் செல்லுவதை கவனிக்கலாம். தவிர, Île aux Cygnes செயற்கை தீவினையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க சுதந்திரதேவி சிலையையும் பார்க்கலாம்.
தவிர, ஈஃபிள் கோபுரமும் இங்கிருந்து பார்க்க மிக அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இரவு வேளையில் இப்பகுதி அனைத்தும் ஒளிர, இக்கோடை காலத்தில் குளிர் காற்றை வாங்கிக்கொண்டு காலாற ஒரு நடை பயணம் மேற்கொள்ளலாம்.
தவிர, இங்கு நின்று ஓய்வெடுக்கவும், பரிசின் அழகை ரசிக்கவும், சென் நதிமேல் எதிரொலிக்கும் வெளிச்சங்களை ரசிக்கவும் மிக பொருத்தமான இடம்!!

🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan