கிறிஸ்மஸ் கொண்டாட்டம்... 38,000 பாதுகாவலர்கள் குவிப்பு!
25 மார்கழி 2024 புதன் 13:18 | பார்வைகள் : 6395
கிறிஸ்மஸ் நிகழ்வுகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், அனைத்து தேவாலயங்களிலும் காவல்துறையினர், ஜொந்தாமினர் என மொத்தமாக 38,000 பாதுகாவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
”அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை” என ஜொந்தாமினர் ஊடக பேச்சாளர் கேணல். Marie-Laure Pezant தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) ஜெர்மனியின் Magdeburg (Germany) நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டும், 200 பேர் காயமடைந்துமிருந்தனர்.
இந்த தாக்குதலை அடுத்து, பிரான்ஸ் முழுவதும் உச்சநிலை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan