Bobigny என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

16 ஆவணி 2018 வியாழன் 11:30 | பார்வைகள் : 20751
பரிசின் புறநகர்களில் மிக 'பிஸி'யான நகரம் பொபினி.. பொபினி குறித்து பல சுவாரஷ்ய தகவல்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பொபினியின் பெயர் காரணம் குறித்து அறிந்து கொள்ளலாம்..!!
பொபொனியில் வசிப்பவர்களை "பல்பீனியன்ஸ்" (Balbyniens) என அழைப்பார்கள்... இதற்கு பின்னால் பல காரண காரியங்கள் உண்டு.
ரோமன் காலத்தில் பொபினி அமைந்திருந்த இடத்தினை Balbiniacum என அழைத்தார்கள். அப்படியென்றால் அமைதியான, சாந்தமான என அர்த்தம். அதாவது அப்பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அனைவரும் மிக அமைதியானவர்கள் என அர்த்தமாம்.
இந்த Balbiniacum எனும் பெயர் பின் நாட்களில் சுருங்கி, Balbo - Balbinus மற்றும் Balbinius என உருமாறி, பின்னர் Bobigny' என ஆனது.
பெயர் மருவினாலும் அதன் அர்த்தம் இன்னும் அதுவாகவே உள்ளது. பொபினி என்றால், 'ஊமை அல்லது மிக அமைதியான மனிதர்!' என அர்த்தமாம்!!
இது உண்மையா என பொபினியில் வசிப்பவர்களைத்தான் கேட்கவேண்டும்...!!