Paristamil Navigation Paristamil advert login

Melun : தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் பலி!!

Melun : தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் பலி!!

26 தை 2025 ஞாயிறு 06:45 | பார்வைகள் : 4875


Melun (Seine-et-Marne) நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து இரு சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

ஜனவரி 24, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இத் தீ விபத்து ஏற்பட்டதாகவும், rue Bancel வீதியில் உள்ள குறித்த வீட்டில் தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மற்றும் 13 மாதங்கள் வயது கொண்ட இரு பிள்ளைகளும் இருந்த நிலையில், இரு பிள்ளைகளும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு, முதலுதவி சிகிச்சைகள் அளித்த நிலையில், அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அக்கட்டிடத்தில் வசித்த 32 பேர் வெளியேற்றப்பட்டனர். மாலை 4 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இரு சிறுவர்கள் பலியாகியுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்