உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் அமெரிக்கா
25 தை 2025 சனி 05:44 | பார்வைகள் : 6365
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக பயன்படுத்தியுள்ளதாக டொனால்ட் டிரம்ப், குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு உலக சுதாதார அமைப்பை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பில் இருந்து 2026ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதியன்று, அமெரிக்கா வெளியேறும் என்று, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, முக்கிய நன்கொடையாளரின் நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக தெரிவித்தது.
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் முன்பு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்கூட்டியே தகவல் அறிவிக்க வேண்டும். இதோடு 1948 அமெரிக்க சட்டசபை கூட்டுத் தீர்மானத்தின் கீழ், வாஷிங்டனின் நிலுவை தொகையை செலுத்த வேண்டும்.
ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா மிகப்பெரிய நிதி பங்களிப்பை வழங்குகிறது. ஒட்டுமொத்த நிதியில் இருந்து சுமார் 18 சதவீத தொகையை அமெரிக்கா உலக சுகாதார மையத்திற்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan