Cinémathèque Française - சினிமா பெட்டகம்!!
24 பங்குனி 2018 சனி 11:32 | பார்வைகள் : 23377
இன்று சினிமா தொடர்பான ஒரு இடத்துக்குச் செல்லலாம். Cour Saint-Émilion மெற்றோ நிலையத்தில் (வழி 14) இறங்கிக்கொள்ளுங்கள். அருகிலேயே உள்ளது Cinémathèque Française.
உங்களுக்கு சினிமா தொடர்பாக அறிந்துகொள்ள ஆர்வம் என்றால் இந்த கட்டிடம் ஒரு வரப்பிரசாதம். அலிபாபா குகை போல் இருக்கும் இந்த கட்டிடத்துக்குள் சினிமா தொடர்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
சினிமா தொடர்பான புத்தகங்கள், வீடியோ அறைகள், பல 'பொக்கிஷமான' புகைப்படங்கள், சினிமாவுக்கு பயன்படுத்தும் கருவிகள் தொடர்பான புகைப்படங்கள் என இங்கு சினிமா இறைந்து கிடக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் சினிமா ஆய்வுகூடம் என்றே சொல்லலாம்.
1936 ஆம் ஆண்டு முதல் இந்த சேவை இயங்கி வருகிறது. Henri Langlois
& Georges Franju ஆகிய இரு சினிமா ஜாம்பவான்கள் இணைந்து இதை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
சரி, சினிமா தொடர்பாக பல விடயங்களை அறிந்ததோடு மட்டும் இல்லாமல், ஒரு உலக சினிமாவையும் பார்த்துச் செல்லுங்களேன்.,
இங்கு தினமும், உலகம் முழுவதிலும் இருந்து எடுக்கப்படும் மிகச்சிறந்த திரைப்படங்களை திரையிடுகிறார்கள். ஆண்டுகள் வித்தியாசம் இல்லாமல் கருப்பு வெள்ளை திரைப்படங்கள், ஊமைப்படம், 12 ஃபிரேம் திரைப்படங்கள் உட்பட நவீன சினிமாக்கள் வரை திரையிடுகிறார்கள்.
பிரெஞ்சு 'சப்-டைட்டில்' போடப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்களை தினமும் பார்க்கலாம்.
3 யூரோக்கள் அல்லது அதிக பட்சமாக 6 யூரோக்களோடு அலுவல் முடிந்துவிடும். 51 Rue de Bercy, 75012 Paris - இது முகவரி. 01 71 19 33 33 - இது தொலைபேசி எண். செவ்வாய்க்கிழமைகளில் திறக்கபடுவதில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan