”Le Monde” இனை தொடர்ந்து X தளத்தில் இருந்து வெளியேறிய Libération !!
21 தை 2025 செவ்வாய் 16:33 | பார்வைகள் : 17422
X என பெயர்மாற்றப்பட்ட டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் இருந்து Le Monde ஊடகம் வெளியேறுவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை Libération ஊடகமும் வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
”எங்கள் செய்தித்தாள் மதிப்புமிக்கது” என தெரிவித்து, X தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். ”ஜனவரி 21, 2025 முதல், X சமூகவலைத்தளத்தில் எங்களது கருத்துக்களை, செய்திகளை பகிர்வதை நிறுத்துவதாக லிபரேஷன் முடிவு செய்துள்ளது!” என குறிப்பிடப்படடுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் இந்த முடிவினை எட்டியதாகவும், அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை X தளம் கொண்டுள்ளதாகவும், தீவிர வலதுசாரிகளுக்கு இணக்கமான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan