ஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க சிறந்த ஐந்து இடங்கள்!!
28 பங்குனி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 21910
ரைட்... இன்று ஒரு அட்டகாசமான பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. பரிஸ் என்றதும் உங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது ஈஃபிள் கோபுரம் தானே?? நீங்கள் பரிசில் வசித்தாலு சரி.. இல்லை பிரான்சின் வேறு பகுதிகளிலோ, ஐரோப்பாவிலோ... உலகில் எங்கோ.. நீங்கள் ஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க ஆசைப்பட்டால்... இந்த பதிவை Bookmark செய்து வைத்துக்கொள்ளுங்கள்..!
01) ஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க முதலில் நாம் பரிந்துரைப்பது 'TROCADÉRO GARDENS' ஆகும். ஈஃபிள் கோபுரத்தினை அனேகம் பேர் இங்கிருந்து தான் புகைப்படம் எடுப்பார்கள். இது ஒரு 'ஸ்டாண்டர்ட்' வியூ!!
ஈஃபிள் கோபுரத்தினை நேராக புகைப்படம் எடுக்க மிகச்சிறந்த இடமும் இது தான். அதிகாலையோ, சூரியன் சுட்டெரிக்கும் மதிய வேளையிலோ... எப்போதும் 'பரவசம்' தான்! இங்கு சூரிய வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படமும், செல்ஃபியும் எப்போதும் கொள்ளை அழகுதான்.
முக்கியமாக கவனிக்கவும், இப்பகுதி எப்போதும் மிக பிஸியான பகுதி. கன்னாபின்னாவென கூட்டம் தெறிக்கும். உங்கள் 'ப்ளானை' காலையிலேயே வைத்துவிடுங்கள்.
தவிர, இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் ஈஃபிள் கோபுரத்தின் புகைப்படங்களில் 80 வீதமானவை இங்கிருந்து தான் எடுக்கப்படுகின்றன.
இங்க : Place du Trocadéro, 75016 Paris.
02) AVENUE DE CAMOENS
'செல்ஃபி' எடுக்க இது ஒரு 'யாருமறியா' இடம். இங்கிருந்து ரகசியமாய் எட்டிப்பார்ப்பது போல் ஈஃபிள் கோபுரத்தினை நீங்கள் பார்க்கலாம். அதற்கு இங்கிருக்கும் பதினெட்டு சொச்சம் படிகளில் ஏறவேண்டும் நீங்கள்... அவ்வளவுதான். குறிப்பாக இரவில் புகைப்படம் எடுக்க மிக அருமையான இடம். உங்கள் மீது வெளிச்சமும், இருட்டு பின்னணியில் மிளிரும் ஈஃபிளும் என நீங்கள் ஒரு செல்ஃபி எடுத்தால்... திருஷ்ட்டி சுத்தி போடவேண்டும் ஐய்யா..
இங்க : Avenue de Camoens 75116 Paris.
மீதி மூன்று இடங்களையும் நாளைக்கு சொல்கிறோம். காத்திருங்கள்..!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan