Iéna யுத்தமும்... வெற்றி சின்னங்களும்..!
1 சித்திரை 2018 ஞாயிறு 13:30 | பார்வைகள் : 25204
பிரான்சில் உள்ள ஒவ்வொரு வீதிகளுக்கும், தொடரூந்து நிலையங்களுக்கும் வைக்கப்படும் பெயர்களுக்கும் பின்னால் பெரு வரலாறே புதைந்து கிடக்கும்.. அது போன்றதே 'Iéna' எனும் பெயரும்.
'Iéna பெரு யுத்தம்!'
நெப்போலியனின் யுத்த வீரர்களுக்கு மிகப்பெரும் வெற்றிச் சமர்ப்பணம் இந்த Iéna யுத்தம். ப்ருஷியா நாட்டின் (தற்போதைய ஜெர்மனி) Jana எனும் பகுதியை பிரெஞ்சு மாமன்னன் நெப்போலியனின் படைகள் வென்று வந்தது. இந்த யுத்தம் 1806 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இடம்பெற்றது.
'Iéna மெற்றோ நிலையம்'
யுத்தத்தின் வெற்றின் நினைவாக, 1923 ஆம் திகதி பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள 9 ஆம் இலக்க மெற்றோ நிலையத்துக்கு 'Iéna மெற்றோ நிலையம்' என பெயர் சூட்டப்பட்டது. நிலையம் 27 மே, 1923 ஆண்டு திறக்கப்பட்டது.
'Avenue d'Iéna'
இதுவும் 16 ஆம் வட்டாரத்தில் தான் உள்ளது. Avenue Albert De Munக்கும் Place de l'Étoile இடையே இணைக்கும் 35 மீட்டர்கள் நீளமுள்ள இந்த வீதிக்கு 'Avenue d'Iéna' என யுத்தத்தின் நினைவாக பெயர் சூட்டப்பட்டது.
'Pont d'Iéna'
இது நீங்கள் அடிக்கடி கடக்கும் பாலம் தான். 1814 ஆம் ஆண்டு இந்த பாலம் திறக்கப்பட்டது. 1807 ஆம் ஆண்டு நெப்போலியனால் இந்த பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் 7 வருடங்கள் கழித்து திறக்கபட்டது. இப்பாலத்தின் ஒவ்வொரு கால்களுக்கும் இடையே 28 மீட்டர்கள் நீளம் உள்ளது.
இதன் பிறகு இந்த வீதியிலோ, மெற்றோ நிலையத்திலோ, மேம்பாலத்திலோ கடக்க முயன்றால்... இந்த வரலாற்று பின்னணியை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்...!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan