பயங்கரவாதம் : அல்ஜீரிய பிரபலம் Bondy இல் கைது!!
17 தை 2025 வெள்ளி 08:13 | பார்வைகள் : 17888
அல்ஜீரியாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் Bondy நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணை போனதாகவும், சமூகவலைத்தளத்தில் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துக்கள் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Mahdi B என்பவரே கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து சமூகவலைத்தளத்தில் இயங்கும் (influenceur) குறித்த Mahdi B என்பவர், பிரான்சுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததோடு, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார். அதை அடுத்து அவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அவர் 'பிரெஞ்சு மண்ணில் வன்முறைச் செயல்களைச் செய்ய விரும்புவதாக' காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். குறித்த அவரது சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டு காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை உள்துறை அமைச்சர் Bruno Retailleau, நேற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan