வடகொரியா பெண்கள் முகம் கொடுக்கும் விசித்திரமான சட்டங்கள்
12 தை 2025 ஞாயிறு 11:46 | பார்வைகள் : 6521
வட கொரியாவில் இருந்து வெளியேறிய பெண் ஒருவர் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
வடகொரியாவில் இருந்து வெளியேறிய பெண்ணுடன் சமூகவலைத்தளப் பிரபலம் ஜோ ரோகன் நடத்திய உரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில, வடகொரியாவில் அனைவரது வீடுகளிலும் கிம் ஜாங் உன்(Kim Jong Un) படத்தை வைத்து இருக்க வேண்டும்.
ஒரு தூசு கூட படியாமல் அந்த படம் இருக்க வேண்டும். திடீரென நள்ளிரவில் கூட வந்து அதிகாரிகள் வீட்டை தட்டி படத்தில் தூசு இருக்கிறதா..? என பார்ப்பார்கள்.
அந்த புகைப்படத்தில் ஏதாவது அழுக்கு இருந்தால் அது அரசுக்கு விசுவாசமில்லாத செயலாக கருதப்பட்டு, அந்த நபர் உடனடியாக கைது செய்யப்படுவார்.
மரண தண்டனை கூட இதற்கு விதிக்கப்படலாம், அல்லது குடும்பத்தில் மூன்று தலைமுறையினருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
ஒருவேளை வீடு தீப்பிடித்தால், கிம் ஜாங் உன் படத்தை தான் முதலில் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகே உயிரை காப்பாற்றிக்கொள்வது பற்றி யோசிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசித்தர சட்டம் தொடர்பில் உண்மை தன்மையை நாட்டு மக்கள் மட்டுமே அறிவார்கள்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan