Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

12 தை 2025 ஞாயிறு 10:16 | பார்வைகள் : 7902


ஆப்கானிஸ்தானில் 12.01-2025 காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை 5.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.33 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.