சீனாவில் அதிதீவிரமாக பரவும் HMPV... உலக நாடுகள் கலக்கம்
8 தை 2025 புதன் 11:31 | பார்வைகள் : 7399
சீனாவில் பல மாகாணங்களில் தீவிரமாக HMPV தொற்றானது பரவி வருகின்றது.
HMPV பாதிப்புக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதுடன், வெளியாகும் தகவல்களில் பெரும்பாலான சீனா மருத்துவமனைகள் பாதிப்புக்குள்ளானவர்களால் நிரம்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் குளிர் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுவது வழமையானது என சீனா பதிலளித்துள்ளது.
இந்திய மாகாணமான கர்நாடகா அதிரடி நடவடிக்கையாக HMPV பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், முகக்கவசம் அணியவும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை கர்நாடகா மாகாணத்தில் மூவருக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் HMPV பரவல் தொடர்பில் பிரித்தானியாவில் இதுவரை பெரிய கவலை எதுவும் எழவில்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் கடந்த 15 நாட்களில் HMPV பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், சீனாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறித்தும் சீனா இதுவரை உண்மையான தரவுகளை வெளியிடவில்லை.
இருமல், காய்ச்சல், தொண்டை புண், மூச்சுத்திணறல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடக்கத்தில் காணப்படலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதிப்பு தீவிரமடைந்தால், நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியாக உருவாகலாம் என்றும் வயதானவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சாதாரணமாக லேசான அறிகுறிகளின் காரணமாக, சோதனைகள் பொதுவாக தேவையில்லை, ஆனால் மக்கள் தொடர்ந்து அறிகுறிகளைப் பற்றி கவலைப்பட்டால், அவர்கள் தங்கள் பொது மருத்துவரை நாடலாம் என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan