Val-d'Oise : தொடருந்து நிலையத்தில் வைத்து கத்திக்குத்து.. ஒருவர் கைது!

Val-d'Oise : தொடருந்து நிலையத்தில் வைத்து கத்திக்குத்து.. ஒருவர் கைது!

27 கார்த்திகை 2024 புதன் 14:57 | பார்வைகள் : 9785


Val-d'Oise மாவட்டத்தில் உள்ள Garges - Sarcelles தொடருந்து நிலையத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

33 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாலை 7.30 மணி அளவில் குறித்த நபர் RER D தொடருந்துக்காக காத்திருந்த போது, அவரை நெருங்கிய ஆயுததாரி ஒருவர் திடீரென வரை தாக்கியுள்ளார்.

உடனடியாக மருத்துவக்குழுவினரும், காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர். SAMU மருத்துவக்குழுவினர் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளை, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய ஆயுததாரி சம்பவ இடத்தில் இருந்து சில நூறு மீற்றர் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டார். 29 வயதுடைய அவர், Viry-Châtillon (Essonne) நகரில் வசிப்பதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க