தொடர் பொய்களால் பலியான Samuel Paty, மன்னிப்பு கோரிய சிறுமி!!

26 கார்த்திகை 2024 செவ்வாய் 21:00 | பார்வைகள் : 8464
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசியர் Samuel Paty இன், நீதிமன்ற விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவது அறிந்ததே. இன்று நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணைகளில், இந்த தாக்குதலுக்கு மூல காரணமாக அமைந்த 13 வயதுச் சிறுமி (தற்போது 17 வயது) நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.
இரண்டு நாட்கள் பாடசாலைக்கு செல்லாமல் விட்ட சிறுமி, அதற்காக அவரது பெற்றோர்களிடம், 'பேராசிரியர் Samuel Paty இஸ்லாம் மதம் குறித்தும், நபி குறித்தும் அவதூறு பரப்புகிறார். அதனால் தான் வகுப்பில் இருக்க பிடிக்கவில்லை!' என காரணம் சொல்லியுள்ளார். இதுவே பின்னர் அச்சிறுமியின் தந்தை வழியாக பயங்கரவாதி ஒருவனின் காதுகளுக்குச் சென்று கொலையில் முடிந்தது.
இன்று பெயர் குறிப்பிடப்படாத அச்சிறுமி நீதிமன்றத்தில், நீதிபதிகள் முன்னால் மன்னிப்புக் கோரினார். 'நான் உங்கள் குடும்பத்தைச் சிதைத்து விட்டேன். எனது பொய்யை யாரேனும் கண்டுபிடிப்பார்கள் என நம்பினேன். என்னை மன்னித்துவிடுங்கள்!' என அவர் தெரிவித்தார்.
Samuel Paty இன் வழக்கறிஞர் தெரிவிக்கையில், "இந்த சிறுமி தவறை உணர்ந்துள்ளார். ஒருவருடத்துக்கு முன்னர் அனைத்துக்கும் தந்தை தான் காரணம் என்றார். இப்போது மூல காரணம் அவர் என்பதை உணர்ந்துள்ளார். மனதளவில் உடைந்ந்துள்ளார். மன்னிப்பு கோருகிறார்.' என தெரிவித்தார்.
மிகவும் உணர்ச்சிகரமாக இன்றைய விசாரணைகள் முடிவுக்கு வந்தது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1