ஆசிரியரின் மகிழுந்தை திருடிய 9 வயது மாணவன் - கைது!

26 கார்த்திகை 2024 செவ்வாய் 17:27 | பார்வைகள் : 4820
ஆசிரியர் ஒருவரின் மகிழுந்தை திருடிச் சென்ற 9 வயது மாணவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் கடந்தவார திங்கட்கிழமை (நவம்பர் 18) இச்சம்பவம் இடம்பெற்றது. 9 வயதுடைய மாணவன் ஒருவர், அவரது ஆசிரியரின் மகிழுந்தை திருடிக்கொண்டு பாடசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். ஒருமணிநேரம் கழித்து வீதி ஒன்றில் வைத்து விபத்துக்குள்ளானார்.
விபத்து இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர், விசாரணைகளை மேற்கொண்ட போது, அந்த மகிழுந்து அவரின் ஆசிரியருடையது எனவும், மகிழுந்து திருடப்பட்டதை அவர் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.