Cergy-Pontoise : பேருந்து சாரதிகள் வேலை நிறுத்தம்! - இழப்பீடு வழங்க உறுதி!!

26 கார்த்திகை 2024 செவ்வாய் 15:26 | பார்வைகள் : 5860
கடந்த 19 நாட்களாக Cergy-Pontoise மற்றும் Conflans-Sainte-Honorine (Val-d'Oise) நகரங்களில் இயங்கும் பேருந்து சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100% சதவீதம் இழப்பீடு வழங்கப்படும் என்பதை இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபை உறுதிசெய்துள்ளது.
கடந்த நவம்பர் 7 ஆம் திகதி முதல் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட் 80,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல கட்டங்களில் இதுவரை சாரதிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1