Paristamil Navigation Paristamil advert login

போக்குவரத்து தடைகளைச் சந்திக்கிறது மெற்றோ 14 !!

போக்குவரத்து தடைகளைச் சந்திக்கிறது மெற்றோ 14 !!

26 கார்த்திகை 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5495


14 ஆம் இலக்க மெற்றோ, வரும் 2025 ஆம் ஆண்டில் பல மாதங்கள் பலவித போக்குவரத்து தடையைச் சந்திக்க உள்ளதாக இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில், பல்வேறு விதப்பட்ட போக்குவரத்து தடைகளை இந்த மெற்றோ சந்திக்கிறது. அதன்படி, வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 10 மணியுடன் சேவை நிறுத்தப்படும் எனவும், மாததில் ஒருமுறை வார இறுதி நாட்களில் முற்று முழுதாக சேவை நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஓகஸ்ட் 4 - தொடக்கம் 8 வரையான ஐந்து நாட்கள் முற்று முழுதாக தடைப்பட உள்ளன. 

14 ஆம் இலக்க மெற்றோவானது எட்டு புதிய நிலையங்களால் விஸ்தரிக்கப்பட உள்ளது. 28 கி.மீ நீள தண்டவாளம், மற்றும் தொடருந்து நிலையங்கள் அமைக்கும் பணி இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்