Jacques Anquetil எனும் மகா வீரன்!!
3 பங்குனி 2019 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 21046
ஒரு சாதனையாளனின் சாதனை எப்போதோ வேண்டுமானாலும் முறியடிக்கப்படலாம். ஆனால் அதை பார்ப்பதற்கு நாம் உயிருடன் இருக்கின்றோமா எனதுதான் கேள்வி..!
Jacques Anquetil என்பவர் ஒரு சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர். இவர் 1987 ஆம் ஆண்டு தனது 53 ஆவது வயதில் உயிரிழந்தார். ஆனால் இவர் விட்டுச் சென்ற சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமல் உள்ளது.
ஜூலை மாதம் என்றால் கோடை விடுமுறை ஞாபகம் வருகிறதோ இல்லையோ, Tour de France ஞாபகம் வரும். இந்த போட்டியில் முதன் முதலில் ஐந்து வெற்றிகளை பெற்ற நபர் இவராவர்.

அதுவரை பல சைக்கிள் ஓட்ட பந்தையங்களில் கலந்துகொண்ட வர், முதன் முதலாக 1957 ஆம் ஆண்டு இடம்பெற்ற Tour de France இல் வெற்றி பெற்றார்.
பின்னர் அடுத்த ஆண்டு (1958) இடம்பெற்ற போட்டியில் கலந்துகொண்டார். அதில் தோல்வியடைந்தார். 1959 இல் போட்டியிட்டார். தோல்வி. 1960 - தோல்வி..
அப்போது தான் அவருக்கு 'வெற்றி ஒவ்வொரு தடவையும் அதிஷ்ட்டத்தின் பேரால் கிடைத்துவிடாது' என்ற உண்மை தெரியவந்தது.
முன்னரை விட இப்போது மிக வெறித்தனமான பயிற்சியில் ஈடுபட்டார். தினமும் பயிற்சி.. 'ஒரு சாம்பியன் தொடர் தோல்வியை சந்திப்பதா?? கூடாது!' பயிற்சி.. பயிற்சி...!!

1961 ஆம் ஆண்டு Tour de France போட்டியில் இணைந்துகொண்டார்.
வெற்றி!!
அடுத்த வருடம்..
1962
வெற்றி!!
மீண்டும்..
1963
வெற்றி..!!
1964
வெற்றி!!
தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சாம்பியன் ஆனார். வரலாற்று பக்கங்களில் தனது பெயரை நிரந்தரமாக பதித்தார்!!
இன்றுவரையில் ஐந்து தடவைகள் வெற்றி பெற்ற முதல் மாவீரன் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஆனால் இந்த சாதனை 2018 ஆம் ஆண்டு வரையில் முறியடிக்கப்படவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள உயிரோடு இல்லை என்பதே பெருஞ்சோகம்!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan