இந்த பட்டியலில் ஐரோப்பாவுக்குள் பரிஸ் முதலிடம்! - அட கடவுளே!!

4 பங்குனி 2019 திங்கள் 12:34 | பார்வைகள் : 21254
முந்தைய பிரெஞ்சு புதினத்தில், ஐரோப்பாவின் ஜனத்தொகை அதிகம் கொண்ட நகரங்களில் இஸ்தான்புல் நகரமே முதலிடம் என தெரிவித்திருந்தோம். அந்த பட்டியலில் பரொஸ் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என தெரிவித்திருந்தோம் இல்லையா? ஆனால் பிரச்சனை அங்கு முடியவில்லை.
ஜனத்தொகை என்ற பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தாலும், பரிஸ் ஏன் இத்தனை நெருக்கடியாக உள்ளது. 'அடர்த்தி' என்ற ஒரு விஷயம் உண்டு. அதாவது குறிபிட்ட ஒரு பகுதிக்குள் எவ்வளவும் மக்கள் வசிக்கின்றார்கள் என்பதே இங்கு சிக்கல்.
பரிஸ் நகரம் 105.4 சதுர கிலோமீற்றர்கள் (40.5 மைல்கள்) பரப்பளவு கொண்டது. மொத்த சனத்தொகை 2,203,817.
அதாவது ஒரு சதுர மைல் தூரத்துக்கு 54,415 எனும் கணக்கில் வசிக்கின்றனர்.
பல நேரங்களில் ஒரு நகரில் வசிக்கும் மக்கள் தொகை என்பதை விட, இந்த அடர்த்தி மேட்டர் தான் பல சிக்கலை எழுப்பிவிடும். (வாடகை உள்ளிட்ட இதர செலவீனங்களை இது தீர்மானிக்கும்)
ஆனால் ஆச்சரியமான ஒரு விடயம் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நகரம் ஸ்பெயினின் L'Hospitalet de Llobregat ஆகும். ஆனால் இங்கு மக்கள் தொகை 252,171. (அட.. இரண்டரை இலட்சம் தான்.) ஆனால் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு எப்படி வந்தது?
காரணம் அந்த நகரம் வெறுமனே 12.4 சதுர கிலோமீற்றர்கள் தான்.!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025