Amanda Lear : திறமைகளின் முகவரி!!

7 பங்குனி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 21710
Amanda Lear - பிரெஞ்சு தேசத்தின் மிக முக்கிய புள்ளி. திறமைகள் பல கொட்டிக்கிடக்கும் அடையாளம்.
நவம்பர் 18, 1950 ஆம் ஆண்டு பிறந்த Amanda Lear க்கு நடப்பு ஆண்டில் 69 வயது.
இவர் ஒரு பொப் இசை பாடகர். காலத்துக்கும் அழியாத பல 'ஹிட்' பொப் பாடல்களை தந்துள்ளார். இவரின் 'Follow me' , 'I don't like disco', 'Solomon Gundie' 'Enigma' என ஹிட் பாடல்கள் ஒரு தொகை.

இவரே பாடல்கள் பாடுவதோடு, இசையமைத்து வரிகளையும் எழுதுவார்.
அத்தோடு நின்றாரா என்றால் இல்லை. இவர் ஒரு நடிகையும் கூட. பிரெஞ்சு பெண்மணி என்றாலும், சிறுவயதில் இலண்டனில் படித்ததால் ஆங்கில உச்சரிப்பு அம்சமாய் ஈர்க்கும். இவரின் பாடல்கள் உலகளாவிய ரீதியில் ஹிட் அடிக்க இதுவும் ஒரு காரணம்.
அதை விடுங்கள், இவர் ஒரு முன்னாள் 'மொடல் அழகி'.. நவீன யுக ஆடைகளை அணிந்துகொண்டு 'ராம்ப் வோக்' சென்றால், இளசுகளின் மனதை புயல் போல் அடித்துச் செல்வார்.
இத்தோடு முடிந்ததால் என்றால் அதுதான் இல்லை. இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளும் கூட. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல்லாயிரம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
இவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்.
அத்தோடு விட்டாரா, இவர் ஒரு திறமையான ஓவியரும் கூட.
அட.. இவர் ஒரு பிரெஞ்சு டி.ராஜேந்தர் போல.. இவ்ளோ திறமை வச்சிருக்காரே.. என நீங்கள் யோசிக்கிறது புரிகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025