வெடிகுண்டு : கிட்டத்தட்ட 4,000 பேர் வெளியேற்றம்!!
24 கார்த்திகை 2024 ஞாயிறு 11:52 | பார்வைகள் : 9130
இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 4,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Annecy (Haute-Savoie) நகரிப் இந்த வெடிகுண்டு கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி கட்டுமானப்பணிகளுக்காக நிலத்தை தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்டது. அது இயங்கும் நிலையில் இருப்பதால் அதனை அகற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.
அதை அடுத்து, இன்று நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் அப்பகுதியில் வசிக்கு 3,900 பேர் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு அகற்றப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan