Val-de-Marne : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!

Val-de-Marne : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!

23 கார்த்திகை 2024 சனி 19:49 | பார்வைகள் : 15118


காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நவம்பர் 22 வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Saint-Mandé (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. கத்தி ஒன்றை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட 22 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் சோதனையிட முயற்சித்த போது அவர் மிகவும் ஆக்ரோஷமாகவும், காவல்துறையினரை அவமதிக்கும் நோக்கில் நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் காவல்துறையினரை தாக்க முற்பட்டதுடன், அவர்களது துப்பாக்கியையும் பறிக்க முயன்றார். இறுதியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு குறித்த நபரை கைது செய்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

தொடர்ந்து படிக்க