கணவன் உதைப்பந்தாட்ட பிரியர் என்றால் விவாகரத்து! - நூதன சட்டம்!!

17 பங்குனி 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 20694
தலைப்பை பார்த்து ஆச்சரியப்படுகின்றீர்களா?? அட.. ஊர் உலகத்தில் நடக்காததையா நாம் சொல்கின்றோம்..? குறட்டை விட்டால் டிவோர்ஸ் என்றால் ஏன் இது மட்டும் சாத்தியம் இல்லை??!
ஐரோபிய இரத்தத்தில் ஊறிப்போன உதைப்பந்தாட்டம், உளவியல் ரீதியாக பெரும் மாற்றத்தை கொண்டுவந்து விடுகின்றது என ஆய்வாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
பிரான்சில் ஒரு நூதனமான சட்டம் இருக்கின்றது. அதாவது உங்கள் கணவர்/ மனைவி தீவிரமான உதைப்பந்தாட்ட பிரியர் என்றால்... உங்களுக்கு அது குறித்து கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்றால், அதனால் உங்கள் நிம்மதி கெடுகின்றது என்றாக்... நீங்கள் தாராளமாக விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
'என் புருஷன் எப்ப பாரு ஃபுட்போல் எண்டு கிடந்து சாக்குறார்!' என நீங்கள் உங்கள் விவாகரத்துக்கான காரணத்தை தெரிவித்தால், நீதிமன்றம் இக்காரணத்தை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும். இதற்கு பிரெஞ்சு சட்டத்தில் இடம் உள்ளது.
இதனால், நீங்கள் உதைப்பந்தாட்ட பிரியர் என்றால், உங்களது துணையையும் அதற்கேற்றால் போல் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
கணவன் மனைவி இருவரும் உதைப்பந்தாட்ட பிரியர்கள் என்றால், சுபம்!!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025