Paristamil Navigation Paristamil advert login

கண்ணீர்புகை தாக்குதல்... - Saint-Lazare நிலையத்தில் பரபரப்பு..!!

கண்ணீர்புகை தாக்குதல்... - Saint-Lazare நிலையத்தில் பரபரப்பு..!!

18 கார்த்திகை 2024 திங்கள் 07:07 | பார்வைகள் : 6429


Saint-Lazare நிலையத்தில் திடீரென கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நவம்பர் 16, சனிக்கிழமை குறித்த நிலையத்தில் உள்ள McDonald's துரித உணவகத்துக்குள் நுழைந்த ஒருவர், திடீரென அங்கிருந்த வாடிக்கையாளர்களை நோக்கி கண்ணீர் புகை குடுவை ஒன்றை உடைத்து வீசி எறிந்தார். இதனால் உணவகம் புகைமண்டலமாக மாறியது. வாடிக்கையாளர்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர்.

பின்னர் தொடருந்து நிலைய பாதுகாவலர்கள் உதவியுடன் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்