இணையவழி மோசடி.. 500 மில்லியன் யூரோக்களை கடந்தது... பரிசில் அவசர சந்திப்பு!
22 மார்கழி 2024 ஞாயிறு 10:14 | பார்வைகள் : 14259
இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளன. 500 மில்லியனுக்கும் மேலாக மோசடிகள் பதிவானதாக நிதிச் சந்தைகள் ஆணையம் (l’autorité des marchés financiers (AMF) அறிவித்துள்ளது.
டிசம்பர் 19, வியாழக்கிழமை பரிசில் ஒரு அவசர சந்திப்பு இடம்பெற்றது. இதில் மோசடிகளை கட்டுப்படுத்தும் Direction générale de la concurrence et de la consommation et de la répression des fraudes அதிகாரிகளும், l’autorité des marchés financiers அதிகாரிகளும், அரச வழக்கறிஞர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். அதில் குறித்த இணையவழி மோசடிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதன் பின்னர் ஊடக சந்திப்பிலும் ஈடுபட்டனர்.
இதுபோன்ற மோசடிகள் பிரான்சில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும்,35 வயதுக்குட்பட்ட நபர்களே இந்த மோசடியில் அதிகளவில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அசல் போலவே தோற்றமளிக்கும் இணையத்தளங்கள், துண்டுச் சீட்டுக்கள் போன்றன முன்னை விட அதிகமாக தயாரிக்கப்பட்டு ஏமாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறாக 500 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan