ஈஃபிளை காப்பாற்றவேண்டும்!!
9 ஐப்பசி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 23854
ஈஃபிள் கோபுரத்தை கட்டிய Gustave Eiffel, தற்போது ஆபத்தின் விளிம்பில் உள்ளார். ஆச்சரியத்தை கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்து படியுங்கள்...!!
Gustave Eiffel ஈஃபிள் கோபுரத்தை கட்டுவதற்கு முன்னர், உலகின் பல நாடுகளில் பல கட்டிடங்களை, மேம்பாலங்களை நிறுவினார். வடிவமைத்தார். பிரான்சின் 'வெளிச்சம்' என அடையாளப்படுத்தப்பட்டார்.
ஆனால் இவரின் திறமைகளில் உருவான கட்டிடங்களில் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்படுவது 'சாட்சாத்' நமது ஈஃபிள் கோபுரம் தான்.
பெரு, ருமேனியா, இத்தாலி, துருக்கி, ஹங்கேரி, கிரேஸ், அமெரிக்கா, பிரித்தானியா, பிரேஸில், மெக்ஸிகோ, ஸ்பெயின், எகிப்த், போர்துகல், வியட்னாம், போலாந்து, வெனிசுலா, ஆர்ஜெண்டீனா என அளவு கணக்கில்லாமல் தனது கட்டிடக்கலையை உலகம் முழுவதும் விட்டுச் சென்றிருக்கிறார் Gustave Eiffel...
தற்போது சமூக ஆர்வலர்கள், அமைப்பினர் என்ன சொல்கின்றார்கள் என்றால், 'Gustave Eiffel, பிரான்சின் பெருமை மிகு அடையாளம். அவரின் படைப்புகளில் ஈஃபிள்கோபுரத்தை மாத்திரம் பாதுகாத்தால் பத்தாது... அனைத்து உருவாக்கங்களையும் காப்பாற்ற வேண்டும்!' என முழக்கமிடுகின்றனர்.
இதற்கு காரணம் இல்லாமலில்லை, வியட்னாமில் Gustave Eiffel கட்டிய கட்டிடங்கள் கிட்டத்தட்ட அழிந்தே விட்டன. இன்னும் பல நாடுகளில், நவீன காலத்தின் தேவை கருதி இடித்து தள்ளி விட்டார்கள்... இல்லையென்றால் பழமையை மறைத்து, 'புதுப்பித்து விட்டார்கள்!'
பிரான்சிலும் அவரின் எத்தனையோ கட்டிடங்களும், மேம்பாலங்களும் 'கைவிடப்பட்ட' நிலையில் உள்ளன.
பிரான்சில் அவரின் பெயருக்காக சிலவற்றை பாதுகாக்கலாம்... ஆனால் மிக நெருக்கடியான நகருக்குள் இருக்கும் சில கட்டங்களை 'பழமை' மாறாமல் அப்படியே வைத்திருப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று...
பிரான்சிலேயே இது சாத்தியம் இல்லை எனும் போது, பிற நாடுகளுக்கு இந்த கோரிக்கையை எப்படி வைப்பது??
இத்தனை களோபரங்களுக்குள், "passerelle St Jean" என அழைக்கப்படும் Bordeaux நகரில் உள்ள தொடரூந்து மேம்பாலத்தை இடிக்கப்போகிறார்களாம்... இதற்காக கருத்துக்கணிப்பு வைத்து, வாக்கெடுப்பு வைத்து, சங்கம் அமைத்து... அது பெரும் கதை!!
Gustave Eiffel'ஐ யார்தான் காப்பாற்றுவது??!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan