திடீரென ஒரு நாள் பரிசில் குவிந்த கரடிகள்! - என்னாச்சு??!
10 ஐப்பசி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 21976
பரிசில், அன்று காலை விடிந்திருந்தபோது, பல கரடிகள் இராட்சத உருவில் அணிவகுத்து நின்றன... காரணம் என்ன??!
சம்பவம் இடம்பெற்றது 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி. விஷயம் என்னவென்றால் 'UNITED BUDDY BEARS' எனும் ஒரு அமைப்பினர் தான் இந்த ஏற்பாடை செய்திருந்தனர். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த இந்த அமைப்பினர், உலகம் முழுவதும் பயணித்து, அங்கு கரடி பொம்மைகளை காட்சிக்கு வைக்கின்றனர். இதுதான் அந்த அமைப்பினரின் வேலை.
ஏன் கரடி என்றால்...? விலங்குகளில் கரடி மிக அன்பானதாம். உலகம் முழுவதிலும் வசிக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் அன்புடன் நடத்தவேண்டும். அன்பு செலுத்தவேண்டும் என தெரிவிப்பதுதான் இவர்கள் நோக்கம்
இவர்கள் தான் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 18 ஆம் திகதி வரை பரிசில் கண்காட்சி நடத்தினார்கள். ஈஃபிள் கோபுரத்துக்கு முன்பாக (Champ de Mars) இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. விதம் விதமான கரடிகள், வெவ்வேறு நிறங்களில் வர்ணம் தீட்டப்பட்டு.. அனைத்துமே அமைதியையும் அன்பையும் போதிக்கும் வகையில் வடிவமைத்திருந்தார்கள்.
இந்த கரடிகளை காண பரிஸ் மக்கள் படை திரண்டு வந்தார்கள். புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் செய்தார்கள்.
அன்பே சிவம் என்றும் சொல்லலாம்... அன்பே கரடி என்றும் சொல்லலாம்!!

🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan