Paristamil Navigation Paristamil advert login

சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!

சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!

6 கார்த்திகை 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 22493


அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்றது. 
 
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள, La Santé சிறைச்சாலைக்கு எதிரே ஒரு தேநீர் கடை இருந்தது. 
 
சிறைச்சாலையின் 'வெளியேறும்' கதவுக்கு எதிரே இருந்த இந்த தேநீர் கடை மகா பிரசித்தம்.  
 
சிறைச்சாலையின் பெயர், La Santé; என்றால் ஆரோக்யம். தேநீர்கடையின் பெயர் 'À la bonne Santé'.. என்றால் நல்ல ஆரோக்யம்... அட!!
 
சிறையில் இருந்து வெளியாகும் கைதிகளை சந்திக்க, அவர்களின் உறவினர்கள் இந்த தேநீர்கடையில் தான் காத்திருப்பார்கள். 
 
இதனாலேயே இந்த மிக வெற்றிகரமாகவும், எப்போதும் மக்கள் நிறைந்து இருக்கும் ஒரு இடமாக மாறிப்போனது. இதுவே இந்த தேநீர் கடைக்கு வில்லனாகவும் மாறிப்போனது. 
 
1980  ஆம் அண்டு இந்த தேநீர்கடை நிரந்தரமாக மூடப்பட்டது. 
 
இந்த தேநீர் கடையை மூலமாக வைத்து, பல்வேறு சிறுகதைகளும், நாவல்களும் எழுதப்பட்டன. தவிர பல திரைப்படங்களிலும் இந்த தேநீர்கடை பதிவாகியுள்ளது. 
 
சிறைச்சாலை போன்று ஒரு தேநீர்கடையும் புகழடைந்தது ஆச்சரியம் தான் இல்லையா??
 

வர்த்தக‌ விளம்பரங்கள்