பரிஸ் : 15 கிலோ கொக்கைன் மற்றும் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!!

6 மார்கழி 2024 வெள்ளி 17:11 | பார்வைகள் : 9869
15 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிச்சன்னங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் பரிசில் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றுக்கு வழமைக்கு அதிகமாக பலர் வந்துபோவதை அவதானித்த சிலர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளர். சம்பவம் தொடர்பில் ஆராய, குறித்த வீட்டின் கதவு பதியும்படியும், வீட்டைச் சுற்றியும் பல கண்காணிப்பு கமராக்களை காவல்துறையினர் பொருத்தினர்.
பின்னர் அதனை அவதானித்ததில், குறித்த வீட்டில் இருந்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவது நிரூபனமானது.
உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு, குறித்த வீடு சோதனையிடப்பட்டது. 26 வயதுடைய இளம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 15 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள், 7.62 Tokarev caliber துப்பாக்கிச்சன்னங்கள் 100 உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025