மரண தண்டனையை சட்டத்தில் இருந்து நீக்கிய ஜனாதிபதி François Mitterrand!!
24 மார்கழி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 23722
<<Capital punishment>> என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற மரண தண்டனையை ஜனாதிபதி François Mitterrand, பிரெஞ்சு சட்டதிட்டத்தில் இருந்து நீக்கினார்.

66-1 எனும் இந்த சட்டம் இயற்றப்பட்டு, ஒக்டோபர் 9 ஆம் திகதி 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி கையெழுத்திட்டார். <<Nul ne peut être condamné à la peine de mort>> என்பதே அந்த சட்டம், அதாவது 'யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படக்கூடாது!' என்பதாகும்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பிற்பாடு பிரான்சில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை.
இறுதியாக செப்டம்பர் 1977 ஆம் ஆண்டு துனிஷிய நாட்டு கொலைகாரன் Hamida Djandoubi என்பவனுக்கு மார்செ சிறைச்சாலையில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரண தண்டனை அவனுக்கு விதிக்கப்படும் போது அந்த செயல் பத்தோடு பதினொன்று... ஆனால் அடுத்த சில ஆண்டுகளின் பின்னர் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதும், இறுதியாக யாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என வரலாறு கேள்வி எழுப்பியது... அதன் முடிவில் தான் Hamida Djandoubi மிக பிரபலமாகி, விக்கிப்பீடியாவில் பக்கம் உருவாக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டது.
மற்றபடி, அவன் தனது முன்னாள் காதலியை மிக மோசமாக துன்புறுத்தி கொலை செய்த சைக்கோ கொலைகாரன்.
மரண தண்டனை கூடாது என பலர் போராடினார்கள். அதில் ஒருவர் எழுத்தாளர் Victor Hugo!!
எது எப்படியோ, மரண தண்டனையை அகற்றி, பிரெஞ்சு சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்த ஜனாதிபதி François Mitterrand, தனது வாழ்நாளில் செய்த சிறப்பான செயல் அது!!

🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan