Descriptive geometry : பிரெஞ்சு தேசத்தின் மகத்தான கண்டுபிடிப்பு!!
_crop_615x324.jpeg)
26 மார்கழி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 21071
Descriptive geometry என்பது ஒரு பொருளின் முப்பரிமாண வடிவத்தை கண்டுபிடிப்பதாகும்.
அதாவது ஒரு கோயில் கோபுரத்தை 90° இல் உச்சத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்... அருகே அல்லது தூரத்தில் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை கண்டுபிடிப்பதாகும்.
இந்த அறிவியல் கண்டுபிடிப்பு கட்டிடக்கலையில், தொழில்நுட்பத்தில் என இன்று பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இன்று இதை கணனியில் இலகுவாக உருவாக்கிவிட முடியும் என்றபோதும் இதற்கெல்லாம் முன்னோடியாய் இருந்தது இந்த Descriptive geometry.
இதை பிரெஞ்சு கணிதவியலாளர் Gaspard Monge என்பவர் கண்டுபிடித்தார். பல்வேறு தோல்விகளின் பின்னர், 1765 ஆம் ஆண்டு இதை ஒரு வடிவத்துக்கு கொண்டுவந்தார்.
மே 9, 1746 ஆம் ஆண்டு Beaune, (Côte-d'Or) நகரில் பிறந்த Gaspard Monge, பின்னர் கணைதவியலுக்காக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, இறுதியில் அவர் ஒரு பல்கலைக்கழகமும் ஆரம்பித்தார்.
பிரான்சின் பெருமைமிகு அடையாளமாக பின்னர் அந்த பல்கலைக்கழகம் மாறியது!!