Paristamil Navigation Paristamil advert login

வளர்ப்புநாயை துன்புறுத்திய பெண்ணுக்கு ஓராண்டு சிறை!!

வளர்ப்புநாயை துன்புறுத்திய பெண்ணுக்கு ஓராண்டு சிறை!!

3 மார்கழி 2024 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 6815


வளர்ப்பு நாய் ஒன்றை முடி உலர்த்தி (sèche-cheveux) மூலம் துன்புறுத்தி அதன் முடியை கருக்கிய பெண் ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Seine-et-Marne மாவட்டத்தில் வசிக்கும் 34 வயதுடைய பெண் ஒருவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் குறித்த பெண் அவரது 'அமெரிக்கன் புல்' இன வளர்ப்பு நாயை துன்புறுத்தியுள்ளார்.  அருகில் வசிக்கும் சிலர் நாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு காவல்துறையினரை அழைத்துள்ளனர்.

மிருகங்களை பாதுகாக்கும் அமைப்பினர் சம்பவ இடத்துக்கு சென்று நாயை மீட்டதுடன், அப்பெண் மீது வழக்கும் தொடுத்தனர்.

அதை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அப்பெண்ணுக்கு நேற்று திங்கட்கிழமை, ஒருவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்