Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் அடுத்த வருடத்தில் தீர்மானம் 

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் அடுத்த வருடத்தில் தீர்மானம் 

15 ஐப்பசி 2024 செவ்வாய் 14:31 | பார்வைகள் : 5031


இலங்கையில் வரிச் சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காகக் கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பரிசீலனை செய்து, வாகன இறக்குமதி தொடர்பில் அடுத்த வருடத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் திறைசேரியின் இயலுமை என்பன குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்