கனடாவின் மீது சைபர் தாக்குதல்
15 ஐப்பசி 2024 செவ்வாய் 14:33 | பார்வைகள் : 1545
கனடாவின் பல்வேறு நூலகங்கள் மீது தொடர்ச்சியாக சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கல்கரி பொது நூலகம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதனால் அந்த நூலகம் தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளது. நூலகத்தின் அனைத்து பௌதீக நிலையங்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.
கல்கரி நூலகத்தில் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே பாரிய எண்ணிக்கையிலானவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த சைபர் குற்றவாளிகள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சைபர் தாக்குதல்களினால் எவ்வாறான தகவல்கள் களவாடப்பட்டன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.