360° விசாலத்தில் ஒரு மதுச்சாலை..!!
1 மாசி 2020 சனி 10:30 | பார்வைகள் : 22353
பரிசில் ஆங்காங்கே பல விநோதமான இடங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் ஒரு மதுபான விடுதி குறித்து தெரிந்துகொள்ளலாம்.
பரிசில் எத்தனையோ மதுபான விடுதி இருந்தாலும், இது மிக வித்தியாசமானது. ஆண்களுக்கு உயரமான இடத்தில் இருந்து 'தண்ணியடிப்பதற்கு' மிகவும் பிடிக்கும் என்கிறது ஆய்வு. அதனாலேயே ஆண்கள் மொட்டை மாடி நோக்கி பயணப்படுகின்றனர்.
இந்த மதுபான விடுதியும் ஒரு 'மொட்டைமாடி' கான்செப்ட் தான்.
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள Bar le Perchoir விடுதி தான் இது.
கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் மொட்டை மாடியில் உள்ளது இந்த விடுதி.
மிக விலையுயர்ந்த சோஃபா இருக்கைகளும், மரம் செடி கொடிகளும் என 'சூழல்' களை கட்டுகின்றது.
மொட்டை மாடி என்பதால் பரிசின் அழகை 360° பாகை கோணத்திலும் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக இரவு நேரத்தில் இதன் அழகை வார்த்தையால் விபரிக்க முடியாது.
நாம் அடிக்கடி சொல்வது போல் பரிஸ் மாநகரம் இரவில் கொள்ளை அழகானது. ஆனால் அதை பார்ப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் தான் மிக குறைவு. அதற்கு இந்த விடுதிதான் மிகச்சரியானது.
cocktail ஒன்றில் விலை €12 களாகவும், draught beer ஒன்றின் விலை €5 களாவும் உள்ளது. (விலை சற்று அதிகம் தான்) ஆனால் இந்த 'அட்மோஸ்பிய'ருக்காக இந்த பியரின் விலையை பொறுத்துக்கொள்ளலாம்.
கூட்டம் தான் இங்கு பெரும் தொல்லை. அலை மோதும். குறிப்பாக மாலை நேரத்தில் மிக நீண்ட 'கியூ' இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். ஆனால் அதையும் மீறி உங்களுக்கான இருக்கையை பெற்றுக்கொள்வதே மிக 'ஜாலி'யான விஷயம் தான்:)
14 rue Crespin du Gast
Paris, 75011 என்பது தான் முகவரி..!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan