கடலில் இருந்து 128 அகதிகள் மீட்பு!
13 ஐப்பசி 2024 ஞாயிறு 15:50 | பார்வைகள் : 17894
பிரான்சில் இருந்து ஆங்கிலக்கால்வாயூடாக பிரித்தானியா நோக்கி பயணித்த 128 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மூன்று சிறிய படகுகளில் அகதிகள் கலே கடற்பிராந்தியம் வழியாக பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். நேற்று ஒக்டோபர் 12, சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. படகுகள் பாரம் தாங்காமல் கடலில் கவிழ்ந்ததாகவும், கடற்படையினர் மீட்டு அவர்களை கரைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக 128 அகதிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத கடற்பயணங்களை கண்காணிப்பதற்காக centre régional opérationnel de surveillance et de sauvetage (CROSS) எனும் அமைப்பு செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan