Le Pavillon des Canaux - உங்கள் வீடு போன்ற ஒரு Café..!!

5 மாசி 2020 புதன் 10:30 | பார்வைகள் : 20948
பரிசில் உள்ள ஒவ்வொரு தேநீர் விடுதிகளும் ஒவ்வொரு ரகம். இது போன்ற கஃபே விடுதிகளுக்கு வாடிக்கையாளர்களை இழுப்பதே அதன் 'தீம்' தான்.
கஃபேயில் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், அதன் 'சுற்றுவட்டம்' எப்படி உள்ளது என்பதே இங்கு வாடிக்கையாளர்களுக்கு பெரும் முக்கியமான விஷயமாக உள்ளது.
அப்பஇ ஒரு வித்தியாசமான கஃபே தான் பரிசில் உள்ள Le Pavillon des Canaux.
இங்கு என்ன ஸ்பெஷல்?
இது ஒரு வீடு போன்ற விடுதி. உங்கள் வீட்டின் வரவேற்பறை எப்படி இருக்குமோ அதுபோல் பிரத்யேகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சோஃபா இருக்கைகள், தேநீர் கொண்டிகள், தாவரங்கள், வாசிப்பதற்கு புத்தகங்கள் என உங்கள் வீட்டு வரவேற்பறையே தான்.
சாப்பாடு இங்கு சலட், சூப், கறிகள் உட்பட பல மெனுக்கள் உள்ளன. சிக்கன் குருமா கூட (€10) இங்கு உள்ளது.
கடல் நண்டு சலட் என ஒரு ஐட்டம் நாம் சாப்பிட்டோம். €8 களுக்கு அது மிக சுவையான உணவு தான்:)
நீங்கள் அடுத்த முறை தவறாமல் இங்கு ஒரு விஸ்ட் அடித்துவிட்டு வாருங்கள்..!!
39 quai de la Loire
Paris
75019
*