அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பை கொல்ல ஈரான் முயற்சி
9 கார்த்திகை 2024 சனி 06:08 | பார்வைகள் : 1089
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் பெற்று பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பை கொல்ல ஈரான் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதை ஈரான் மறுத்தது.
இந்த நிலையில் ஈரான், தேர்தலுக்கு முன்பாக டிரம்பை கொல்ல ஈரான் சதி திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
டிரம்பை கொல்ல ஈரானின் சதித்திட்டத்தை எப்.பி.ஐ முறியடித்தது.
ஈரான் புரட்சிகர காவலர் படையை சேர்ந்த பர்ஹாத் ஷகேரியிடம் டிரம்பை கொல்லும் திட்டம் ஈரான் ஆட்சியால் வழங்கப்பட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவை சேர்ந்த கார்லிஸ்லே ரிவேரா, ஜொனாடன் லோட்ஹோல்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்கள் பர்ஹாத் ஷகேரியின் அறிவுறுத்தலின் பேரில், ஈரான் ஆட்சியை விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை கொல்லும் சதியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.