Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ்-இஸ்ரேல் உதைபந்தாட்ட போட்டியில் இடமாற்றம்..??!!

பிரான்ஸ்-இஸ்ரேல் உதைபந்தாட்ட போட்டியில் இடமாற்றம்..??!!

9 கார்த்திகை 2024 சனி 07:00 | பார்வைகள் : 2616


நெதர்லாந்தின் தலைநகர் Amsterdamல் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போது பலத்த வன்முறை வெடித்தது அறிந்ததே. அதை அடுத்து,  Stade de France மைதானத்தில் இடம்பெற இருந்த பிரான்ஸ்-இஸ்ரேல் அணிகளுக்கிடையிலான போட்டி இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக பகிரப்பட்டு வருகின்றன.

வரும் வியாழக்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டுள்ள இந்த போட்டியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. திட்டமிட்டபடி, குறித்த நாளில், குறித்த நேரத்தில் அப்போட்டி இடம்பெறும் என CRIF குழுவின் தலைவர் Yonathan Arfi நேற்று வெள்ளிக்கிழமை தெவித்தார்.

உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவிக்கையில், “சிலர் இந்த போட்டியினை வேறு இடங்களில் நடாத்த கோரியுள்ளனர். நான் அதை ஏற்கவில்லை. பிரான்ஸ் பின்வாங்கவில்லை. ஏனென்றால் வன்முறை மற்றும் யூத விரோத அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும்!” என தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்