திசை திருப்பப்பட்ட எயார் பிரான்ஸ் விமானங்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

4 கார்த்திகை 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 7848
நேற்று நவம்பர் 3 ஆம் திகதி எயார் பிரான்சுக்கு சொந்தமான பல்வேறு விமானங்கள் ஆபிரிக்காவின் கிழக்கு பிராந்தியம் மேல் பறந்துள்ளன. வழக்கத்துக்கு மாறாக இந்த விமானங்கள் 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை' காரணமாக பறந்ததாக எயார் பிரான்ஸ் தெரிவித்தது.
வழக்கமாக செங்கடலுக்கு மேலாக பறக்கும் குறித்த விமானங்கள், மத்திய கிழக்கில் நிலவிவரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக திசைமாற்றப்பட்டு நேற்றைய தினம் ஆபிரிக்க நாடுகளுக்கு மேலாக பறந்தது. குறிப்பாக சூடான் நாட்டுக்கு மேலாக மிகவும் உயரமாக பறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசில் இருந்து மடகாஸ்கர் தலைநகர் Antananarivo இற்கு பறந்த விமானம் ஒன்றும், பரிசில் இருந்து கென்யாவின் தலைநகர் Nairobi இற்கு பறந்த விமானம் ஒன்றும் இதுபோல் பறந்ததாகவு, குறித்த இரு விமானங்களும் இன்று மீண்டும் பரிசுக்கு திரும்ப உள்ள நிலையில், அப்பயணம் இரத்துச் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025