கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 01)
18 புரட்டாசி 2019 புதன் 10:30 | பார்வைகள் : 21862
இந்த உலகம் எத்தனையோ மோசமான நபர்களை சந்தித்துள்ளது. சைக்கோ கொலைகாரர்களில் இருந்து மில்லியன் கணக்கில் கொள்ளையிட்டுச் செல்லும் கொள்ளையன் வரை.
ஆனால் 'if you are BAD... I'm your DAD' என சொல்வார்களே.. அப்படிப்பட்ட ஒரு நபரின் கதை தான் இந்த தொடர். மோசடிக்காரனுக்கெல்லாம் அப்பன் இவன்.
பிரெஞ்சு தாய் தந்தைக்கு மகனாக பிறந்தவன் தான் Frank William Abagnale Jr. இவன் மீது உள்ள வழக்குகள் என்றால் சொல்லி மாளாது. படு பயங்கர புத்திசாலியான இவன்.. இந்த மொத்த உலகத்தையுமே முட்டாள்கள் தேசம் என எண்ணிக்கொண்டான். இங்கு யாரையுமே சுலபமாக ஏமாற்றலாம் என எண்ணிக்கொண்டான்.
முதலாவது சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றது.
அவனது தந்தை பெற்றோல் நிரப்பும் வங்கி கடன் அட்டையை கொடுத்து, தனது வாகன சாரதியோடு பகுதி நேர வேலைக்காக அனுப்பி வைக்கின்றார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்ற அவன், அங்குள்ள விற்பனை நிலையத்தில் டயர், பேட்டரி உள்ளிட்ட வாகனத்துக்கு தேவையான பல பொருட்களை தனது அப்பாவின் கடன் கட்டை மூலம் வாங்கிக்கொள்கின்றான். அதன் மொத்த மதிப்பு $3,400 டொலர்ஸ். (2018 ஆம் ஆண்டின் மதிப்பில் $27,825 டொலர்ஸ்)
பின்னர் அப்பொருட்களை கடைக்காரனிடமே திருப்பி கொடுத்துவிட்டு அப்பொருட்களின் மதிப்புக்குரிய பணத்தை பெற்றுக்கொள்கின்றான்.
பின்னர் வங்கியிடம் இருந்து அவனது தந்தைக்கு கடிதம் வருகின்றது. உங்கள் மாத கடன் தொகை $3,400 டொலர்கள் என. தந்தை மயங்கி விழாத குறைதான்.
இந்த சம்பவத்தை மேற்கொள்ளும் போது Abagnale இற்கு வயது வெறும் 15.
அப்போதில் இருந்து, யாரை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம் என தீர்க்கமாக நம்பியிருந்தான்.
-நாளை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan